‘விவிலியம் ஒரு நூல் அல்ல ஒரு நூலகம்’ என்பது ஒரு கூற்று. பல்வேறூ வகையான நூல்களின் தொகுப்பு அது. கத்தோலிக்க விவிலியத்தில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன. யூத விவிலியத்தில் 24 புத்தகங்கள் உள்ளன. பிற கிறித்துவ சபைகள் சில புத்தகங்களை நீட்டியும், பிரித்தும், நீக்கியும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இரு பெரும் பிரிவுகளாக விவிலியம் பிரிக்கப்பட்டுள்ளது 1. பழைய ஏற்பாடு 2. புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு மைய கருத்துக்கள் ஒரே கடவுள் - மிக முக்கியமான வேறுபாடு கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வழியாக மக்களுடன் உறவாடினார் (தலைவர்கள், நீதிமான்கள், அரசர்கள், தூதுவர்கள், சாமனியர்கள்) யூதக் இனக்குழு வரலாறு கடவுளை நம்பும்போது நன்மையும், விலகும்போது தீமையும் வந்து சேரும் மெசியா குறித்த தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டின் பிரிவுகள் (46) மோசேயின் புத்தகங்கள் (அ) தோரா (அ) Pentateuch (5) தொடக்கநூல் - (ஆதியாகமம்) - படைப்பு, ஆதாம் ஏவாள், காயின் ஆபேல், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, 12 புதல்வர்கள், யோசேப்பு, எகிப்துக்குச் செல்லுதல் விடுதலைப் பயணம் - (யாத்திராகமம்) - எகிப்தில் அடிமைகளாதல், மோசெ(மோயீசன், Moses), எகிப்தின