நிகழ்ச்சிகள் முதல்நாள் முதல் அரங்கு 1வைணவக் கவிதை : ராஜகோபாலன் (காலை 10- 1130) 2. நவீனக்கவிதை கடலூர் சீனு (மதியம் 12-1) ஓய்வு முதல்நாள் இரண்டாம் அரங்கு 3. சிறுகதை அரங்கு 1 (மாலை 4-430) பாரி 4 சிறுகதை அரங்கு (மாலை 430 -5) சுகதேவ் பாலன் 5 சிறுகதை அரங்கு (மாலை 5-530 தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி 6 சிறுகதை அரங்கு (மாலை 530-6) பார்கவி மாலைநடை முதல்நாள் மூன்றாம் அரங்கு 7 இலக்கியம் பெண்ணியம்- ரம்யா (அந்தி 7-8) 8. விவிலியத்தில் கவிதை - - சிறில் ( அந்தி 8- 9) இரண்டாம் நாள் முதல் அரங்கு 9 நவீன ஓவியக்கலை- ஜெயராம் (காலை930-1030) 10 செவ்வியல் கலைரசனை- அழகிய மணவாளன் (காலை 1030-1130) தேநீர் இரண்டாம் நாள் இரண்டாம் அரங்கு 11 12-1 எம் கோபாலகிருஷ்ணன் இன்றைய சிறுகதைகள் மதிய உணவு இரண்டாம் நாள் மூன்றாம் அரங்கு 12 கவிதை அரங்கு- ஜிஎஸ்எஸ்வி நவீன் . ( மாலை 400- 430) 13 கவிதை அரங்கு -அருள் (மாலை 430-5) 14 கவிதை அரங்கு ( மாலை5-530) விக்னேஷ் ஹரிஹரன் 15 கவிதை அரங்கு (மாலை530-06) வேலாயுதம் பெரியசாமி இரண்டாம்நாள் மூன்றாம் அரங்கு போகன் சங்கர் (கவிதையில் இன்று என்ன நிகழ்கிறது?...
மதிப்புக்குரிய திரு . ஜெயமோகன் அவர்களுக்கு , மணிவண்ணன் அன்புடன் எழுதியது உங்களுடைய உழைப்பில் ( www.jeyamohan.in ) பயனடைந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன் . முதல் முறையாக உங்களுக்கு எழுதுகிறேன் . பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன் . தவறுகளை மன்னியுங்கள் . தற்போது பாரிஸிலிருந்து இதை எழுதுகிறேன் . நீண்ட கேள்விகளுக்கு மன்னிக்கவும் , ஆனால் இப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த தேடலை ஒத்திப் போட இயலவில்லை . மேலும் , PS-1 மற்றும் PS-2 திரைப்படங்களின் வெற்றியில் நாம் அனைவரும் திளைத்திருக்கும் வேளையில் , இக்கேள்விகளை நீங்கள் தான் தெளிவு படுத்துவீர்கள் என்று உணர்கிறேன் .. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி (Normandie) பகுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது , பிரான்ஸ் / இங்கிலாந்து மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் காலகட்டத்தை தொடர்புபடுத்த முயற்சித்த போது எழுந்த சில...
பெரியாழ்வார் பாடல்கள் உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்* நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்* செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும் அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே விளக்கம் - பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய் , பால் , தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள் . 2. கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்* எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்* ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்* மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய். விளக்கம்- ' கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்த...
Comments
Post a Comment