ஜிஎஸ்எஸ்வி நவீன்

நீலமரம்

சுகுமாரன் சாலிகதா

(தமிழில் – பத்மகுமார் பரமேஸ்வரன் – நீலம் | நவம்பர் 2020)

இந்த 

நீலமரம்

நிலவுக்கு

மிகப் பொருந்துகிறது


தூய்மையான ஓடத்தில்

துடுப்புகள் பாடுவது போல்

நதியின் தாளம்


இந்த மரம் 

ஆடி அசைகிறது

ஆடித்தீராத

அழகியின் வளப்புகள்


எத்தனை 

அதிகாலை வெண்மைகள்

உன் கண்களில் 

கோலமிட்டன


இத்தனை நாட்களும்

கண்ணாடித் துண்டுகள்

உன் முகம் பார்த்து மயங்கின


உடைந்தகண்ணாடித்துண்டுகள்

ஒன்றுசேர்ந்தால்

ஏராளம் அழகிகள்

***

பறவை

சுகுமாரன் சாலிகதா

இன்றைய மரத்தில்

ஒரு புதிய பறவை வந்தது

அதன் சிறகின் வண்ணங்கள் கண்டு

இலைமகள்கள் வெதும்பினர்

கொஞ்சம் குலுக்கிப் பார்த்தனர்

கொஞ்சம் ஆட்டிப்பார்த்தனர்

ஆனால்

அந்தப் பறவை

நடனம் பயின்றவளாயிருந்தாள்


நீரில் முகம்கழுவச் சென்றபோது

கண்டேன்

அவளையும்

அவள் 

நிறத்தையும்.


கறுப்பழகி.


அவள் 

சிறகழகு பிடித்துவிட்டது

முகத்தழகு ஆசைதந்தது

கண்ணழகில் சிரிப்பு வந்தது


வாய்பாட்டுகள்

என்னைச் சுற்றித்திரிகையில்

கிள்ளியும் கிள்ளுபடாத அவளுக்கு

நானொரு பெயரிட்டேன்

பறவை

***

மரக்கொம்பு

 சாந்தி பனக்கன்

தமிழில்: நிர்மால்யா, ஆவநாழி இதழில் வெளிவந்தது.

காட்டிலொரு மரக்கொம்பு

ஒடிந்து கிடக்கிறது

இறந்துவிட்டதா

அல்லது

உயிர் உள்ளதா?


ஒவ்வொரு நாளும் நானதை கடந்து போகிறேன்

ஒரு நாள் அதில்

இரண்டிலை தளிர்த்தது

ஓரிலையில் நான் 

அன்பென்றெழுதினேன்

மற்றொன்றில் வாழ்வென


வேர் நீர் பிடித்து

தண்டு உரம் பிடித்து

நீலக்கல் வைத்த ஆகாயம் தொட்டது.

உழுதிட்ட வயலைக் காண

தலை நீட்டி நீட்டி

கொம்பு மரமானது

மகனொரு ஏறுமாடம் கட்டினான்

மகளொரு ஊஞ்சல் இட்டாள்

பறவையொரு குடும்பமுண்டாக்க

இலையொரு நிழல்விரித்தது

நானொரு குடில் கட்டி

வேலி நடவும்

வேர்கள் எல்லை கடந்தன

அதனால்தான் 

அதனால்தான்

நாங்கள் அதை வெட்டியிட்டோம்

கொண்டுபோக உறவில்லாமல்

உதிரம் துடிக்கக் கிடக்கிறது

நேற்று நான் கண்ட கொம்பும்

நாளை நான் காண விழைந்த காடும்.

***

பணியர் மொழியில்: கோலு கொம்பு

 சாந்தி பனக்கன்

காட்டிலொரு கோலு கொம்பு

ஒடிஞ்சு கிடக்கிஞ்சோ.

சத்தணோ 

அல்ல

சீம உளணோ?

ஓரோ நாளு நானவெ கடந்து போஞ்சே,

ஒரு நாளு

இரண்டிலே வந்த.

ஓரிரெம்பே நானு..

இட்ட எஞ்செழுத்தே.

பின்னொஞ்சும்பே ஜீவிதனும்

வேர் நீர் வச்சு

தண்டு தடி வச்சு

நீலே கால்லு வெச்ச மானத்தொட்டு.

ஊளி இட்ட கட்ட காம.

நீலே நீட்டி நீ

கொம்பு மராத்த.

மகனொரு ஏறுமாடம் கெட்டுத்த.

மகளொரு ஊஞ்ஞாட்டளு.

பக்கியொரு குடும்ப உண்டாக்குத்த.

இலயொரு தணலுட்ட

நானொரு கூடு கட்டி

வேலி திரிச்சக்கு

வேரு அதிரு கடந்தா.

அவேங்காஞ்சு அவேங்காஞ்சு 

வெட்டியுட்டே..

கொண்டு போவ குடிப்படில்லடெ..

சோரெ புடச்சு கிடந்துள

இன்னலெ நானு கண்ட கோலுகொம்பும்

நாளெ ஞான் காமதிரச்ச காடும்.

***

சாந்தி பனக்கன் : பணியர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் நடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.

***

ஈவு

க. மோகனரங்கன்

சிதை வெளிச்சம் 

காணும் மட்டும்

சிந்தை இருட்டு 

மிஞ்சும்.

***


Comments

Popular posts from this blog

வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்

நிகழ்ச்சி நிரல்