மதிப்புக்குரிய திரு . ஜெயமோகன் அவர்களுக்கு , மணிவண்ணன் அன்புடன் எழுதியது உங்களுடைய உழைப்பில் ( www.jeyamohan.in ) பயனடைந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன் . முதல் முறையாக உங்களுக்கு எழுதுகிறேன் . பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன் . தவறுகளை மன்னியுங்கள் . தற்போது பாரிஸிலிருந்து இதை எழுதுகிறேன் . நீண்ட கேள்விகளுக்கு மன்னிக்கவும் , ஆனால் இப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த தேடலை ஒத்திப் போட இயலவில்லை . மேலும் , PS-1 மற்றும் PS-2 திரைப்படங்களின் வெற்றியில் நாம் அனைவரும் திளைத்திருக்கும் வேளையில் , இக்கேள்விகளை நீங்கள் தான் தெளிவு படுத்துவீர்கள் என்று உணர்கிறேன் .. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி (Normandie) பகுதிக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது , பிரான்ஸ் / இங்கிலாந்து மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் காலகட்டத்தை தொடர்புபடுத்த முயற்சித்த போது எழுந்த சில...
Popular posts from this blog
வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்
பெரியாழ்வார் பாடல்கள் உறியை முற்றத்து* உருட்டி நின்று ஆடுவார்* நறுநெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்* செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து* எங்கும் அறிவு அழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே விளக்கம் - பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய் , பால் , தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள் . 2. கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்* எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்* ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்* மிடுக்கு இலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய். விளக்கம்- ' கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்த...
விவிலியம் வாசிப்பு- சிறில் அலெக்ஸ்
‘விவிலியம் ஒரு நூல் அல்ல ஒரு நூலகம்’ என்பது ஒரு கூற்று. பல்வேறூ வகையான நூல்களின் தொகுப்பு அது. கத்தோலிக்க விவிலியத்தில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன. யூத விவிலியத்தில் 24 புத்தகங்கள் உள்ளன. பிற கிறித்துவ சபைகள் சில புத்தகங்களை நீட்டியும், பிரித்தும், நீக்கியும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இரு பெரும் பிரிவுகளாக விவிலியம் பிரிக்கப்பட்டுள்ளது 1. பழைய ஏற்பாடு 2. புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு மைய கருத்துக்கள் ஒரே கடவுள் - மிக முக்கியமான வேறுபாடு கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வழியாக மக்களுடன் உறவாடினார் (தலைவர்கள், நீதிமான்கள், அரசர்கள், தூதுவர்கள், சாமனியர்கள்) யூதக் இனக்குழு வரலாறு கடவுளை நம்பும்போது நன்மையும், விலகும்போது தீமையும் வந்து சேரும் மெசியா குறித்த தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டின் பிரிவுகள் (46) மோசேயின் புத்தகங்கள் (அ) தோரா (அ) Pentateuch (5) தொடக்கநூல் - (ஆதியாகமம்) - படைப்பு, ஆதாம் ஏவாள், காயின் ஆபேல், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, 12 புதல்வர்கள், யோசேப்பு, எகிப்துக்குச் செல்லுதல் விடுதலைப் பயணம் - (யாத்திராகமம்) - எகிப்தில் அடிமைகளாதல், மோசெ(மோயீசன், Moses), எகிப்தின...








Comments
Post a Comment