அடர்த்தியான காட்டின் காட்சி. ஒரு யானை மலைச் சரிவில் புதர்களுக்குள் நின்று கொண்டிருக்கிறது. யானை புதர்களுக்குள் நிற்கும் காட்சி எப்போதுமே விந்தையானது. ஓரளவுக்கு அருகில் சென்றால் கூட நம்மால் சட்டென்று யானையை பார்க்க முடியாது . யானை பெரியது என்பதனால் பல பகுதிகளாகவே யானை தெரியும். ஒட்டுமொத்தமாக அது யானை என்று தெரிவதற்கு சில நிமிடங்கள் ஆகும். அந்த காட்சி விந்தையை தொடக்கமாக பயன்படுத்தலாம்.
ஒரு தந்தம் மட்டும் தெரிகிறது. காட்டுயானையின் தந்தம் வெள்ளையாக இருக்காது, மரநிறத்தில் தான் இருக்கும். முதலில் மரக்கிளை என தோன்றி, சட்டென்று அது யானையின் தந்தம் என்று கொஞ்சம் கழிந்து துலக்கம் பெறுகிறது. அதன் பிறகு இன்னொரு தந்தம் முழுமையாக தெரிகிறது. இலை அசைவுடன் இணைந்து யானையின் காது அசைவது தெரிகிறது.
ஒரு யானை அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக முழு வடிவம் பெற்று காட்சிகள் வரும்போது படம் தொடங்குகிறது . யானையின் கண்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது இறுதியாக தெளிவடைகிறது.
அங்கிருந்து மிக தொலைவில் ஒரு மலையின் உச்சியில் யானையோ பிற விலங்குகளை ஏறி வர முடியாத இடத்தில் கல் பாளங்களை போட்டு ஒரு பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜமீன்தார் மருதையா பாண்டியன் அமர்ந்திருக்கிறார் ஒரு குறுநில மன்னருக்குரிய தோற்றம் ஆனால்
அது பிரிட்டிஷ் ஆட்சி காலம் ஆனதனால் பிரிட்டிஷ் பாணி உடையும் அரசர்களுக்குரிய உடையும் கலந்த வகையில் அவர் அணிந்திருக்கிறா. கால்களில் தோலாலான முழங்கால் வரை வரைக்கும் வரும் கம்-பூட்டுகள். காக்கி துணியாலான கால்சட்டை. அது குதிரையில் ஏறத்தக்க வகையில் இடுப்புப் பகுதி மிக அகலமாக மடிப்புச் சுருக்கங்களுடன் இருக்கும். இடுப்பில் தோல் பெல்ட் , அதில் இரண்டு பக்கமும் குத்துக்கக்தியும் ரீவால்வர் உறையும். மேலே காக்கி நிறமான முழுக்கை சட்டை. அதில் தோளில் மாட்டப்பட்ட பொன்னிற சணல்நூல் கயிறில் விசில். மார்பில் வெள்ளையர் அளித்த பதக்கங்கள். ஆனால் கழுத்தில் ஒரு மணிமாலை அணிந்திருக்கிறார். முறுக்கி விடப்பட்ட மீசை . தலையில் சிவந்த பட்டு துணியாளான தலைப்பாகை. அது கிரீடம் போன்ற அமைப்பு கொண்டது .அதன் முகப்பில் அந்த சிற்றரசின் குதிரை முத்திரை கொண்ட பொன்னாலான ஒரு இலச்சினை
அரசருக்கு இருபறவும் இரண்டு காவல் வீரர்கள் , தோள் வரை உயரமான துப்பாக்கியை ஊன்றி நிற்கிறார்கள் .அவர்கள் காக்கி நிற கால் சட்டையும் க பூட்டும் காக்கிச் சட்டையும் காக்கி நிறத்தில் தொப்பியும் அணிந்து இருக்கிறார்கள் .
அங்கிருந்து பார்த்தால் அந்த காடே முழுமையாக தெரிகிறது . கீழே மலை அடிவாரத்தில் வெவ்வேறு மரங்களில் நாலைந்து பரண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்தப் பரண்களில் வேட்டைக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பேர் ஆங்கிலோ இந்திய வேட்டைக்காரன். அவர்கள் வேட்டைக்காரர்க்குரிய கம்-பூட்டுகள், முழங்கால் வரை வரைக்கும் வரும் கால் சட்டை, பெல்ட், காக்கி சட்டை , வேட்டைக்காரருக்குரிய கனமான காக்கி நிற தொப்பி ஆகியவற்ற அணிந்து கைகளில் Pattern 1851 Minié rifle வகை ரைபிள்களை வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நடுவே இளவரசர் ஜெகவீரபாண்டியன் அமர்ந்திருக்கிறார். அவர் வேட்டைக்காரர்களுக்குரிய உடை அணிந்து இருந்தாலும் தன்னுடைய தந்தையை போல தலைப்பாகை மட்டும் அலங்காரமாக அணிந்து கழுத்தில் ஒரு மணிமாலையும் அணிந்திருக்கிறார். அப்பால் வெவ்வேறு பலன்களில் இருக்கும் சாதாரண உள்ளூர் வேட்டைக்காரர்கள் வேட்டியை இறுக்கமாக சுற்றி அதற்கு மேல் பனைநாராலான கச்சை அணிந்திருக்கிறார்கள். அதில் குத்துக் கத்திகளை செருகி வைத்திருக்கிறார்கள். கைகளில் வில் அல்லது அம்பு வைத்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு பேர் மிகப் பழமையான வாய் வழியாக குண்டு போட்டு கம்பியால் குத்தி இருக்கும் பாணியில் ஆன Baker rifle துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள்
ஆங்கில இந்திய வேட்டைக்காரர்கள் ஒரு தூர நோக்கியால் அந்த காட்டை அணுவணுமாக சுழற்றி பார்த்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் அவர்கள் கண்ணுக்கு படவில்லை.
இளவரசன் ஜெகவீர பாண்டியன் பொறுமைய இழந்து ஆங்கில இந்திய வேட்டைக்காரரான ராபர்ட்டைத் தொட்டு எங்கே என்ன என்று கேட்கிறான்.
ராபர்ட்
Be patient, prince; patience is the basic quality of a hunter…
இன்னொரு ஆங்கிலவேட்டைக்காரனான ஜான் புன்னகையுடன் சொல்கிறான்.
ஜான்
And a king….
இளவரசன்
நான்தான் அதைச் சுடுவேன்…
ஜான் மழலைத் தமிழில் சொல்கிறான்
ஜான்
உங்க கையிலே இருக்கிறது Elephant gun...நாநூறு காலிபர் ரைபிள்…இது ஒரு குட்டி பீரங்கி… இந்த ரைபிளோட ஒரு குண்டுபோதும் யானையோட மத்தகம் உடைஞ்சிரும்…
ராபர்ட்
ஆனா பேக் கிக் இருக்கும்…. ரைபிளை சரியா புடிச்சுக்கிடணும்… அதோட மஸ்கட் மரத்திலேயோ பாறையிலேயோ ஒட்டினமாதிரி வைச்சுக்கிட்டா நல்லது…
ராபர்ட் மீண்டும் கூர்ந்து பார்க்கிறார். அவர் பார்த்துவிடுகிறார். கையை தூக்கி சைகை காட்டுகிறார். இளவரசன் எழுந்து பைனாகுலரை வாங்கி கூர்ந்து பார்க்கிறான்.
ஜெகா
நான்தான் அதைக் கொல்வேன்
யானை தொலைவில் நின்றிருக்கிறது. அது அவர்களை பார்க்கிறது. அதன் கண்கள் சுருங்கி விரிகின்றன. காதுகள் அசைவிழக்க முன் காலை தூக்கி முன்னால் வைத்து வாலை முறுக்கிச் சுழற்றிப் பிடித்தபடி அது அசைவில்லாமல் பார்த்தபடி நிற்கிறது.
ராபர்ட் ஒரு சிவப்பு கழியில் கட்டப்பட்ட கொடியை எடுத்து தலைக்கு மேல் தூக்கி ஆட்டுகிறார் அதை மேலிருக்கும் அரசர் பார்த்து விடுகிறார்
குனகாவலர்களில் ஒருவன் குனிந்து அரசரிடம் சொல்கிறான்
காவலன்
கெழக்க நிக்குது மகாராஜா
மருதையா
ஆமாடா, அது இங்க தான் இருக்கு. தெரியும் . எனக்கு சிக்கையன் கோட்டை ராஜ்ஜியம். அதுக்கு இந்தக் காடு ராஜ்ஜியம்… அப்படி எல்லாம் விட்டுப் போக மாட்டோம் …(மீசையை நீவி) ஆனா இங்க ரெண்டுல ஒருத்தர் ராஜாவா இருந்தா போரும்.
பைனாகுலர் வழியாக யானையை பார்க்கிறார்
மருதையா
என்ன பெரிய கொம்பு! இந்த மேற்கு மலைக் காட்டிலேயே பெரிய கொம்பு இதுக்குத்தான்ன். அடுத்தவாரம்பெரிய துரை விருந்துக்கு வரும்போது இந்த ரெண்டு ஆனைக்கொம்பையும் தூக்கிக் குடுக்கணும்….அப்ப தெரியும் நாம யாரு நம்ம யாருன்னு…
சட்டென்று பெரும் பிளிறலுடன் யானை அவர்களை நோக்கி ஓடி வருகிறது. வேட்டைக்காரர்கள் துப்பாக்கிகளை தூக்கி குறி வைக்கிறார். கிளிக் கிளிக் கிளிக் என துப்பாக்கிகளின் பூட்டு விடுபடும் ஒலிகள்.
ஆனால் ஜெகா சட்டென்று அந்த பெரிய ரைஃபிளுடன் தரையில் குதித்து முன்னால் ஓலடி முழங்கால் இட்டு அமர்ந்து பாறையுடன் துப்பாக்கியின் மஸ்கட்டை பொருத்திக்கொண்டு சுடுகிறான்.
அந்தத் அந்தததுப்பாக்கி வெடித்ததும் அந்த பகுதி முழுக்க எதிரொலிகள் கேட்கின்றன. பறவைகள் கலைந்து எழுகின்றன. யானையின் காதை குண்டு துளைத்து செல்கிறது.
ஜெகா திகைத்துவிடுகிறான். யானை பிளிறியபடி திரும்பி அவனைத் தாக்கவருகிறது. அவன் ஓடி ஒரு மரத்தின்மேல் ஏறமுயல்கிறான்
மருதையா
டேய் சுடுங்கடா…யானையச் சுடுங்கடா
ஜான்
Too close!
ராபர்ட்
We can’t shoot!
ஒரு வேட்டைக்காரன் குறிபார்க்க இன்னொருவன் கத்துகிறான்
வேட்டைக்காரன்
டேய் யுவராஜா மேலே பட்டிரும்டா
அவர்கள் தடுமாறிக்கொண்டிருக்க அரசர் கூவுகிறார்
மருதையா
டேய் மாறா! மாறா! மாறா!
அந்த ஓசை எதிரொலிக்க மாறன் தோன்றும் காட்சி
காட்டுக்குள் ஒரு பாறைக்குப் பின்னால் சருகுகள் குவிந்திருக்க அந்த குவியலை பிளந்தபடி மாறன் எழுகிறான். அவன் உடலெங்கும் யானைச்சாணியை பூசியிருக்கிறான்.
யானை இளவரசன் ஏறிய மரத்தை முட்ட மரம் அதிர்ந்து இளவரசன் யானைக்கும் முன்னால் விழுகிறான். ஆனால் அந்தக்கணத்தில் மாறன் வீசிய ஈட்டி யானையின் முதுகை தாக்குகிறது. மாறன் ஆஆஆ என கூவியபடி யானையை நோக்கி ஓடுகிறான்
யானை துதிக்கை சுழற்றி பிளிறியபடி மாறனை துரத்துகிறது. பிறர் உடனே பாய்ந்து இறங்கி இளவரசனை பரண்மேல் தூக்கிக்கொள்கிறார்கள்.
மாறன் காட்டுக்குள் ஓட யானை அவனை துரத்துகிறது. அவன் ஓடும்போது பாறைகள் கால்பட்டு பெயர்ந்து கடகடவென பள்ளத்திற்குள் உருண்டு சென்று விழுகின்றன. புதர்ப்பறவைகள் எழுந்து பறக்கின்றன.
மாறன் ஒரு பாறைமேல் தொற்றி ஏறிக்கொண்டு தன் தோளில் இருந்த பழையபாணி துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறான். யானையின் நெற்றிக்குழியில் குண்டு படுகிறது.
யானை அலறியபடி வந்து அப்படியே தந்தங்களை மண்ணில் குத்தியபடி விழுந்து பக்கவாட்டில் சரிந்து மண்ணில் விழுந்து மலைச்சரிவில் சறுக்கிச் செல்கிறது. கீழே சென்றுகொண்டிருந்த நீரோடையில் சென்று விழுகிறது. அதன்மேல் சிறிய பாறைகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. நீர் ரத்தம் கலங்கி சிவப்பாக ஓடுகிறது.
மாறன் எழுந்து நின்று கையசைக்கிறான். வேட்டைக்காரர்கள் கைகளை தூக்கி கூச்சலிடுகிறார்கள்.
ஆனால் ராபர்ட்டும் ஜானும் முகம் சுருங்கி பேசாமலிருக்கிறார்கள்.
ஜான
How did he do it with that small gun??
ராபர்ட்
An exact shot in the right place…
ஜான்
Lucky guy.
ராபர்ட்
It's not luck; it's talent… But, a talented slave is always a danger…
மன்னர் மருதையா பாண்டியனும் காவலர்களும் மேலிருந்து இறங்கி வருகிறார்கள்.
கீழிருந்து இரண்டு பெரிய தந்தங்களுடன் பணியாளர்கள் வருகிறார்கள். ஒரு தந்தம் 50 கிலோ இருக்கிறது. ஆகவே ஒன்றை இருவர் தூக்கி வருகிறார்கள். அவர்களுக்கு முன்னால் உடலெங்கும் யானையின் ரத்தமும் சேறும் சருகுகளும் படிந்தவனாக மாறன் வருகிறான்
மருதையா
பெரிய தந்தமாடா?
மாறன்
ஒவ்வொண்ணும் அம்பதுகிலோவுக்குமேலே இருக்கும் மகாராஜா
மருதையா
ம்… சரி, யானைய கொன்னது யாரு?
மாறன் குனிந்து வணங்கிச் சொல்கிறான்
நம்ம சின்னமகாராஜாதான்… நான் சாட்சி
மருதையா
ம்… அந்த சொல்லு என்னிக்கும் மறக்கக்கூடாது
சட்டென்று குத்துக்கத்தியால் அவன் முதுகில் கீறுகிறார். ரத்தக்கோடு.
மருதையா
இந்த தடம் நான் போட்ட இந்த உத்தரவோட முத்திரை…ம்ம் போ
மாறனும் அவன் மகன் வேலனும் ஓடையில் இருக்கிறார்கள். மாறன் ஓடையில் உடலைக் கழுவுகிறான்.
மாறனின் முதுகில் பல வடுக்கள் இருக்கின்றன. அவற்றை வேலன் பார்க்கிறான்
வேலன்
அந்த வடுவெல்லாம் இந்தமாதிரி ராஜா கீறினதாப்பா?
மாறன்
ஆமா எல்லாமே ராஜ சாசனங்கள்தான்
சட்டென்று நரிகளின் கலைந்த கூச்சல் ஓசைகள்
வேலன் திடுக்கிட்டு எழுந்து நிற்கிறான்
மாறன்
அதெல்லாம் நரிகள்…செத்த யானையை சாப்பிட வந்திருக்கு… பயப்படாதே
வேலன்
பாவம் இல்லப்பா?
மாறன்
ஆமா…
வேலன்
அத கொன்னது தப்புதானே?
மாறன்
ஆமா…. ஆனா எல்லா ராஜாவும் இன்னொரு ராஜா கிட்ட சண்ட போட்டுட்டுதான் இருக்காங்க… நம்மள மாதிரி ஆளுங்க ஒரு ராஜாவுக்காக இன்னொரு ராஜாவ கொல்றோம்…
வேலன்
ஆமா… யானையைக் கொன்னது நீ… பேரும்புகழும் இளவரசருக்கு
மாறன்
ஏய், மெதுவா பேசு…எவனாவது கேட்டிரப்போறான்…
வேலன்
ஏம்பா? ஏன் இப்டி?
மாறன்
ஏன்னா நாம அடிமைங்க. அவங்க ராஜவம்சம். அது அப்டித்தான். இப்பல்ல, ஆயிரக்கணக்கான வருசமா இது இப்டித்தான்….
வேலன்
நாம கடம்பர் சாதிதானே? நாம எப்பவுமே அடிமையாவா இருந்தோம்?
மாறன்
எல்லா சாதியும் சுதந்திரமா இருந்த ஒரு காலம் இருந்திருக்கும்….எந்தச் சாதியும் நிரந்தரமா அடிமையா இருக்கப்போறதுமில்லை. ஆனா…. இது இந்தக் காலம். இது இப்டித்தான் இருக்கு
இரண்டு மான்களை இரண்டு பக்கமு மாட்டி ஒரு காவடிபோல ஏந்தியபடி மாறன் நடக்க துப்பாக்கி, வேட்டைக்கருவிகள், சுரைக்காய்த் தண்ணீர்குடுவை போன்றவற்றுடன் வேலன் பின்னால் செல்கிறான்.
வேலன்
எல்லாரும் முன்னாடியே போயாச்சு
மாறன்
குளிச்சுட்டு போலாம்னு நினைச்சேன்….அதோட நாம காட்டுக்கு வந்தா வெறும்கையோட ஊருக்கு போகக்கூடாது
வேலன்
மான்கறி நல்லா இருக்கும்ல?
மாறன்
ம்
வேலன்
திரும்பி வாறப்ப கொஞ்சம் கொண்டு வரீயா
மாறன்
ம்
அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடக்கிறது. அந்த இரண்டு தந்தங்களும் நன்றாக கழுவப்பட்டு அதில் மலர் மாலைகள் மாட்டப்பட்டு ஒரு பெரிய கூடத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடத்தில் ஐரோப்பியபாணி பெயிண்டிங்குகள் மாட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்திய பாணியில் ஒரு பெரிய பங்கா மேலே அசைகிறது. பங்காவை வெளியே அமர்ந்த ஒருவன் கயிறு கட்டி இழுத்து அசைத்துக்கொண்டிருக்கிறான்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படைத்தலைவர்கள் அனைவரும் வரும அமர்ந்து சாப்பிடுகிறார்கள். உள்ளூர் ஆட்சியாளர் ஜேக்கப்ஸன் துரை வந்திருக்கிறார். அவருடைய நாயும் அருகே நின்றிருக்கிறது.
பிரிட்டிஷ் பாணியில் பெரிய நீளமான மேஜையில் நிகழும் விருந்து அது. நாலைந்து வெள்ளைக்காரப் பெண்கள் கவுன், தொப்பி, தலையணி அணிந்து கத்தி, ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள். ஜானும் ராபர்ட்டும் இருக்கிறார்கள். அனைவரும் ஐரோப்பிய ஆடை அணிந்துள்ளனர். ஐரோப்பிய பாணியில் உடையணிந்த இரண்டு பட்லர்கள் பரிமாறுகிறார்கள்.
ஏராளமான உணவு பரிமாறப்படுகிறது. இரண்டு மானின் தலைகள் இரண்டு பெரிய தாம்பாளங்களில் வைத்து கொண்டுவரப்பட்டு மேஜைக்கு இரு பக்கமும் வைக்கப்படுகின்றன.
மருதையா
எந்த மான சாப்பிடறோமோ அதோட கண்ணை பார்த்துட்டு சாப்பிடுவதில் ஒரு சந்தோஷம் இருக்கு நாம ஒரு சிங்கமோ புலியோ மாதிரி நமக்குத் தோணும்….
ஜேக்கப்ஸன்
Yes, hunters eates the best!
ஒயின் பரிமாறப்படுகிறது
மருதையா
இன்னிக்கு நாம நம்ம யுவராஜா ஜெகவீரபாண்டியன் இந்த மேற்குமலையிலேயே பெரிய யானையை தன்னந்தனியா போயி கொன்ற வெற்றிய கொண்டாடுறதுக்காக கூடியிருக்கோம்…. சீயர்ஸ்!
அனைவரு. சீயர் சொல்கிறார்கள்
ஜான்
Wine! More wine!
மேலும் ஒயின் பரிமாறப்படுகிறது
சிரிப்பொலிகள். பேச்சுகள்.
ஜேக்கப்ஸன்
This is probably the best meat we ever eat!
ஜான்
யெஸ்!
அமைச்சர் சிக்கையா
நம்ம காட்டு மிருகங்களோட ருசியே தனிதான்
மருதையா
ருசிக்கு நம்ம சமையல்காரன் ஒரு காரணம். தலைவன்கோட்டையிலே ஒரு வேளை இவன் கையால சாப்பிட்டேன். திரும்பி வர்றப்ப நாள் ஆளை அனுப்பி அப்படியே கையக்காலக் கட்டி தர தரன்னு இழுத்து வண்டியில் போட்டு கொண்டு வந்துட்டேன்…
வெளியே மாறன் நின்றிருக்கிறான். அவன் பார்வையில் இரவில் ஒளிவிடும் ஜன்னல்களுடன் அரண்மனை. அங்கே சிரிப்பொலிகள், பேச்சொலிகள். வெளியில் இருந்து சாப்பாடு உள்ளே சென்றபடியே இருக்கிறது.
மிஞ்சிய உணவை பெரிய பொட்டலங்களிலாக எடுத்துக் கொண்டு சென்று தோட்டத்தில் புதைக்கிறார்கள்.
வேலைக்காரன் 1
நூறுபேர் திங்கிற சோறு இருக்கே… கறி…
வேலைக்காரன் 2
இங்கபாரு இப்டி நீ எச்சி ஊறினேன்னு தெரிஞ்சாப்போரும், நாக்க இளுத்துவச்சு அறுத்துருவாங்க… பேசாம இரு
வேலையாள் 1
இல்லண்ணே, எச்சிலுதானே?
வேலையாள் 2
ஆமா, ஆனா இதோட ருசி உனக்கு தெரிஞ்சா விடுவியா? அப்பாலே ஏங்க ஆரம்பிச்சிருவே... ரகசியமா அள்ளி வாயில போட ஆரம்பிப்பே... உனக்கான தீனிதான் உனக்கு.....
மாறன் ஒன்றும் பேசாமல் குழியில் அந்த உணவை கொட்டி மூடுகிறான்.
குடிசைக்குள் வேலன் ஒரு சிறு விளக்கின் ஒளியில் காத்திருக்கிறான். அவன் அம்மா காத்தாயி அழைக்கிறாள்
காத்தாயி
வந்து சாப்புடுடா….நடு நிசி ஆயிடுச்சு
வேலன்
அப்பா வரட்டும்
காத்தாயி
அவரு எப்ப வாறாரோ
வேலன்
வந்துடறேன்னு சொன்னாரு
வெளியே ஓசை. குடிசைப்படல் கதவை அம்மா திறக்க கையில் இரண்டு கொல்லப்பட்ட பெருச்சாளிகளுடன் மாறன் வருகிறான்
வேலன்
அப்பா…. இதுவா இன்னிக்கும்?
மாறன்
நல்லாத்தான் இருக்கும்… வர்ரப்ப பிடிச்சேன்
வேலன்
மான்கறி?
மாறன்
டேய் இந்த ஊரு காடெல்லாம் ராஜாவோட தோட்டம். அங்கு விளையிறது அவங்களுக்கு மட்டும்தான். நம்ம ஜாதிக்கு காட்டில் வேட்டையாடுவதற்கு உரிமை கெடையாது. நாம சாப்பிட வேண்டியது இதைத்தான்… நீ அப்ப கேட்டப்ப கூட ஒருத்தன் பின்னால வந்திட்டிருந்தான்… அதான் இப்ப சொல்றேன்
வேலன் கண்கலங்குகிறான்
வேலன்
ஏம்பா
மாறன்
அதான் சொன்னேன்… அப்படித்தான் அது
மாண்டேஜ் காட்சிகள் வழியாக கடம்பர் ஜாதியின் வரலாறு, ஆசாதாரங்கள் அன்றாட வாழ்க்கை ஆகியவை காட்டப்படுகின்றன
ஒரு சிறிய காட்டுக் கோயில். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சப்பை கல் மேல் ஒரு கல் வைக்கப்பட்டு அதற்கு மாலைகள் போடப்பட்டிருக்கின்றன .அதுதான் அவர்களின் தெய்வம்.
அதற்கு நேர் எதிரே ஒரு பண்டி கொல்லப்பட்டு அதன் தலை வலியாக வைக்கப்பட்டுள்ளது சற்று அப்பால் வலி விலங்கான பந்தியின் உடலை ஒரு கூட்டம் மக்கள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
வயதான பூசாரி அந்த தெய்வத்திற்கு பூஜை செய்கிறார் அந்த தெய்வத்தின் பெயர் காடன்
பூசாரி
கடம்பூர் குலம் காக்கும் காடா! காட்டுக்கு தலைவா !ஏழை எளியவங்களைக் காத்தருளுங்கம சாமி
அவர் பந்தம் கொளுத்தி அதை தீபம்போல போல அந்த தெய்வத்திற்கு சுற்றிக் காட்டிவிட்டு கொண்டு வந்து முன்னால் நடுகிறார்.
உடுக்கை எடுத்து அதை இரண்டு விரல்களால் மீட்டி பாடுகிறார் .
துடியன், பாணன், பறையன், கடம்பன் அல்லது குடியும் இலவே
துடியொலி கேட்டு வா வா காடா !துடியா தலைவா வா வா காடா
இடியொலி போலே துடியொலி கேட்க இடுபலி கொள்ள வாடா காடா
வெடிபடு மண்டலம் அடிமுடி துடிக்க கொடுவாளேந்தி வாடா காடா!
அவர்கள் அனைவரும் கூட்டி அமர்ந்து அந்த பள்ளி சோறை பன்றி கறியுடன் சாப்பிடும் காட்சி
அவர்களின் வாழும் சிறிய குடிசை அங்கே பெண்கள் வரிசையாக சென்று ஒரு சிறிய வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் காட்சி . காத்தாயியும் நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறாள். ஆனால் வழியெல்லாம் வேறு கிணறுகள் உள்ளன.
அவர்கள் அனைவரும் ஜமீனுக்கு சொந்தமான வயல்களுக்கு மண்வெட்டிகளுடன் வேலைக்கு செல்கிறார்கள் அவர்களை சாட்டையால் அறைந்து வேலைக்கு அனுப்புகிறார்கள்.
அவர்கள் இரவில் பந்தங்களை கொளுத்தியபடி வேலையை விட்டு வீடுகளுக்கு திரும்புகிறார்கள். மாறன் வேட்டையாடிய சிறிய விலங்குடன் வீட்டுக்கு வருகிறான்.
அதை அவனும் காத்தாயியும் சேர்ந்து அமர்ந்து சமைக்கிறார்கள். அவர்கள் அதை சாப்பிடும் காட்சி. அதேபோல சிறிய குடிசைகளில் விளக்குகளை சுற்றி அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே படுத்து தூங்குகிறார்கள்.
ஒரு மூக்கமான காளை மாடு சட்டென்று அதன் பார்த்துக் கொள்பவரை முட்டி தூக்கி வீசிவிட்டு உரிமையபெட்டி தப்பி ஓடுகிறது வேலைக்காரர்கள் கூச்சலிடுகிறார் சற்று அப்பால் இருக்கும் மாறன் வேறு எதிராக அதற்கு முன்னால் வந்து அதன் கொம்பை பிடித்து நிறுத்தி அதன் கால்களை தட்டி கீழே போட்டு கழுத்தை வளைத்து அமைத்து பிடித்துக் கொள்கிறார் வேலைக்கல்லோடி வந்து அதற்கு மூக்கடங்குகளை மாற்றுகிறார் பூசாரியிடம் வேலை என்று பேசிக் கொண்டிருக்கிறான் வேலன் நம்ம வீரத்துக்கு ஒரு குறையும் இல்லை இன்னைக்கு நம்ம கைவேலுக்கு பதில் சொல்ல இந்த ஒரு நாள் இல்ல அப்புறம் நாம இதுக்கு அடிமையா இருக்கணும் பூசாரி வீரத்தால யாரும் ஜெயிக்கிறது இல்லை றாங்க மத்தவங்களுக்கு சேர்ந்து சேர்ந்து எண்ணிக்கை கூட்டிகிறவர்கள் காட்டுக்குள்ள தன்னந்தனியா இருந்து நம்மள விட 100 மடங்கு இருந்து ஒரு மடங்கு பெரிய கும்பல் வந்தது இங்கிருந்து கூட்டாளிகள் தான் இருப்பாங்க பலமுறை ஓடி இருக்கும் ஒவ்வொரு முறையும் பிடித்து திரும்பி கொண்டுவந்த இன்னும் கீழே தள்ளிவிடும் இப்போ வெள்ளைக்காரன் காட்சி உலகம் முழுக்க அவங்க தான் இருக்காங்க
ஏன் அவங்கள எதுக்கு ஆளே இல்லையா இருக்காங்க என்னமோ காங்கிரஸ் என்று சொல்றாங்க ஆனால் சூரிய அஸ்தமிக்காத ராஜ்ஜியம் பிரிட்டிஷ் ராஜ் அது கூட இவங்க என்ன பண்ண போறாங்க வெட்டி பசங்க ஆனால் வேலனின் முகம் கூர்மை அடைகிறது
பூசாரி என்ன பாக்குற எதிர்த்து எல்லாம் நினைக்கிறேன் ? இந்த ஊர்ல இருக்க கூடிய நம்ம சனங்களை மொத்தம் 650 பேர் நாம எதுக்கு என்ன பண்ண போறோம் ஒன்னும் பண்ண முடியாம இருக்கலாம் ஆனால் எதிர்த்து சாகுறதுலயும் ஒரு கெத்து மேல் பூசாரி சும்மா இருடா சும்மா இரு எதுக்கு போன பூண்டோட வாங்கிருவோம் இப்போ கொஞ்சம் பேர் உசுரோட இருக்கும் அன்னைக்கு ஜெயிக்கும் இப்ப நமக்கு தேவை பொறுமை தான் ஆனால் வேலன் கொண்டு பேசாமல் அதிருப்தியுடன் எழுந்து நடந்து போகிறான் பூசாரி திரைப்படம் பார்க்கிறார்
மாறன் இளவரசனின் பழைய பாணி காரை பழுது பார்த்துக்கொண்டிருக்கிறான் அதை இரண்டு முறை ஸ்டார்ட் செய்ய அது உதறிக் கொண்டு கிளம்புகிறது இலவச பால் ஒரு சூழல் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார் இளவரசன் நாலு மணி நேரமா போட்டு நோண்டிட்டு இருக்கேன் இது மாதிரி கிளம்பல மாறன் வெள்ளைக்காரன் கிட்ட நாம வாங்கின கார் 50 வருஷம் பழசு சரி பண்ணிட்டோம் ஓடு இளவரசர் புதுசு வாங்கணும் ஆனா ஆர்மில ஓடுன வண்டி தான் வெளியே விக்க ஒத்துக்கிறாங்க புது வண்டி கேட்டாலும் கிடைக்கிறது இல்லை எல்லா புது வண்டி ஆரம்பிக்கப்படுகிறது அப்போது அங்கு இருந்து அப்பால் ஓசைகள் கேட்கின்றனர் யாரையோ காவலர்கள் அடித்து இழுத்து வருகிறார் மாறன் இயல்பாக திரும்பிப் பார்க்க வருபவர்கள் நான்கு இளைஞர்களை அழைத்து வருவதை தெரிகிறது அவர்களை கைகளை கட்டி கயிறு சாட்டை ஆளும் பிரம்புகள் அடித்தபடி கொட்டி வருகிறார் நான்கு பேரில் ஒருவர் வேலை என் பையன் ஆமா அப்படித்தான் தெரியுது என்ன பண்ணலாம் திருடுனா கொலை பண்ண எல்லாம் பொம்பள தான கைய வச்சுட்டாங்க முன்னாள் வரும் ஒரு காவலன் தலைவன் தலைப்பாகை அணிந்திருக்கிறார் அவன் தலைவன் என்று தெரிகிறது அவன் பெயர் சுப்பு சுப்பு பொறுத்தவரையில் சின்ன ராஜா நாட்டுக்கு எதிராக சரி பண்ண நாலு பேர புடுச்சுட்டோம் காட்டுக்குள்ள காங்கிரஸ்காரர்கள் வந்து தங்கி என்னமோ பேசிட்டு இருக்காங்கன்னு செய்தி வந்து தேடி போனோம் மூணு பேரு வெளியூர்க்காரங்க நம்ம ஊரு காரன்
இளவரசன் காங்கிரஸ் நம்ம ஊரிலேயா?
சுப்பு சீக்கு எப்போ வரும் எப்படி வரும்னு சொல்ல முடியாது வந்ததுமே சரிப்படுத்தலைன்னா ஆள சாஸ்திரம் இளவரசன் கைதுக்களை பார்க்கலாம் வேறு என்ன பேசுவாங்க ராஜாவை எப்படி கொள்ளலாம் ? சின்ன ராஜாவை எப்படி கொள்ளலாம் ? அதான பேசுவாங்க இல்ல கஜானா எப்படி கொள்ளை அடிக்கலாம்னு பேசுவாங்க ஐயா மகாராஜா நான் சொன்னா ஜாஸ்தியா இருக்க கூடாது நம்ம நாட்டுக்குள்ள காங்கிரஸ்காரன் மூச்சு காத்திருக்குன்னு தெரிஞ்சாலே தோராது அப்புறம் நம்மள சும்மா விட மாட்டாங்க இப்பவே இதை நசுக்கிடறதுதான் ஒரே வழி.
இளவரசன் அவர்களை ஏற இறங்கப் பார்க்கிறார் எழுந்து சென்று தரையில் கிடத்தப்பட்டிருந்த அவர்களை பார்த்து சுற்றி வந்தவர்கள் வேலனின் தலையை ஓங்கி மிதிக்கிறான் இளவரசன் நிலத்தில் துப்புகிறான் இளவரசன் வேலைன்னு வந்து சொல்லவில்லை இதை பெரியோர் வரை கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை என்ன தண்டனை நீங்க சொல்லிட்டீங்க அண்ணா முடிச்சிடலாம் இளவரசி என்ன தண்டனை கொன்னு புதைச்சுருங்க திரும்பி பார்க்க அங்கே மாறவில்லை மாறன் பாய்ந்து அரண்மனைக்குள் சென்று விடுகிறேன் அரண்மனைக்குள் அரசர் மருதையா பாண்டியன் குதிரைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு குதிரைக்கு தோலால் உடம்பை நீவி தேய்த்து விட்டுக் கொண்டிருக்க அதன் அருகே குதிரைக்கான உடையுடன் அரசன் என்று இருக்கிறேன் ஓடிவரும் மாறன் நேராக அப்படியே குப்புற விழுந்து அரசரின் கால்களை பற்றி கூறுக ஒரே கூடாது இடம் ஏறி சேர்ந்து ஏதோ தப்பு பண்ணிட்டான் சின்ன ராஜா அவனை கொல்வதற்கு உத்தரவு போட்டுட்டாரு இப்ப நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்கனா புள்ள எனக்கு கிடைக்கும் அதுக்கு கைமாற நான் என்ன வேணாலும் பண்றேன் உங்க காலடியில் விழுந்து கிடக்குற நாயிங்க என் பெயர் என்ன நான் உசுரோட இருக்க மாட்டேன் நான் செத்தா உங்களுக்கு ஒரு நல்ல வேலைக்காரன் எனக்கு கருணை காட்டுங்க சரி அவனை கொல்ல மாட்டேன் ஆனா அவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை இருக்கு அதை நான் முடிவு பண்ணுவேன் அந்த தண்டனையை பார்த்து இந்த ஊர்ல இன்னொருத்தன் இது மாதிரி கனவுல யோசிக்க கூடாது சிரித்தபடி ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொள்கிறேன் ஒரு வேலையாளரை பற்றி வைக்கிறேன் அதை புகையி நிதானமாக ஊதியப்படி சொல்லுங்க என்னமோ உசிரை வச்சிருக்கேன்னு சொன்னியே ஒரு உடலை ரெண்டு உசுரு வந்தேன் அப்போ தண்டனையும் புகுந்து அழிச்சிடலாம் துடிக்குதுன்னு பார்க்கலாம் சரியா
Comments
Post a Comment