அடர்த்தியான காட்டின் காட்சி . ஒரு யானை மலைச் சரிவில் புதர்களுக்குள் நின்று கொண்டிருக்கிறது . யானை புதர்களுக்குள் நிற்கும் காட்சி எப்போதுமே விந்தையானது . ஓரளவுக்கு அருகில் சென்றால் கூட நம்மால் சட்டென்று யானையை பார்க்க முடியாது . யானை பெரியது என்பதனால் பல பகுதிகளாகவே யானை தெரியும் . ஒட்டுமொத்தமாக அது யானை என்று தெரிவதற்கு சில நிமிடங்கள் ஆகும் . அந்த காட்சி விந்தையை தொடக்கமாக பயன்படுத்தலாம் . ஒரு தந்தம் மட்டும் தெரிகிறது . காட்டுயானையின் தந்தம் வெள்ளையாக இருக்காது , மரநிறத்தில் தான் இருக்கும் . முதலில் மரக்கிளை என தோன்றி , சட்டென்று அது யானையின் தந்தம் என்று கொஞ்சம் கழிந்து துலக்கம் பெறுகிறது . அதன் பிறகு இன்னொரு தந்தம் முழுமையாக தெரிகிறது . இலை அசைவுடன் இணைந்து யானையின் காது அசைவது தெரிகிறது . ஒரு யானை அவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக முழு வடிவம் பெற்று காட்சிகள் வரும்போது படம் தொடங்குகிறது ...
Posts
Showing posts from February, 2023